கலாஸ்பாளையம் ஸ்ரீவீரபத்திர சுவாமி ஆலயத்தில் தஞ்சம்மாள் 13-ம் ஆண்டு உற்சவம் கோலாகலம்
வேலூர் : கலாஸ்பாளையம் அருள்மிகு ஸ்ரீவீரபத்திர சுவாமி ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு தஞ்சம்மாள் அம்மனின் 13-ம் ஆண்டு உற்சவம் பக்தர்கள் திரளுடன் சிறப்பாக நடைபெற்றது. உற்சவத்தையொட்டி காலை 7.15 மணிக்கு சிறப்பு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.02 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, கரகம் திருவீதி உலா நடைபெற்றது. இதையடுத்து கஞ்சி வார்த்தல் மற்றும் மங்கள தீபாராதனை நடைபெற்றன. மாலை 3 மணியளவில் சிறப்பு அலங்காரத்துடன் தஞ்சியம்மன் திருவீதி உலா நடைபெற்றது. விழாவில் ஓம் கைலாய சிவசித்தர் அம்மையார், ஓம் ஸ்ரீ சௌடாம்பிகை பாலா திரிபுரசுந்தரி பீடத்தைச் சேர்ந்த அருளாளர்கள், கண்ணமங்கலம் பொன்னை ஆட்கொண்ட சிவபெருமான் கோயிலைச் சேர்ந்தவர்கள் மற்றும் தவத்திரு திலிப்சுவாமிகள் உள்ளிட்ட சிறப்பு அருளாளர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். இந்த ஆண்டு கரகத்தை G. சீனிவாசன், S. பிரதீப்குமார் மற்றும் S. செல்வகுமார் ஆகியோர் எடுத்துச் சென்றனர். கோயில் பூசாரிகள், உபயதாரர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் இணைந்து உற்சவப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். விழாவையொட்டி உற்சவர் பூஷ்ப அலங்கார சாத்துபடியை...